June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் நடந்த விபத்து: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

1 min read

Accident caused by eagerness to see Vijay: 5 people admitted to hospital

4.3.2026

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநாட்டிற்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக காரில் வரும் போது, அவரது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் துரத்தி வந்தனர்.

அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் அவரது நண்பர் ஹிலால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிலால் என்ற இளைஞருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மாநாடு முடிந்து தொண்டர்கள் வீடு திரும்பிய போது வல்லம் பிரிவு சாலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் துர்கா, கலைமணி, முத்து ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *