June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் எக்ஸ் தளத்தில் ஆபாச பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்கு தடை

1 min read

Pornographic posts and videos banned on X-sites in India

4.3.2026
சமூக வலைத்தளங்களில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக X தளம் உள்ளது. ‘ட்விட்டர்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த தளத்தை எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கினார்.

எலான் மஸ்க் வாங்கிய பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், பல்வேறு புதுப்புது அப்டேட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகளவில் 586 மில்லியன் பேரும், இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் பேரும் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.

எக்ஸ் தளத்தைப் பொறுத்தவரை ஆபாச வீடியோக்கள் தாராளமாக வலம் வருவதாகவும், அவற்றிற்கு கடிவாளம் போட வேண்டும் என்றும் பயனாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், பயனர்கள் கோரிக்கையை ஏற்று எக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, எக்ஸ் தளத்தில் ஆபாச பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடை இந்தியாவிற்கு மட்டுமே அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கட்டுப்பாடு தொடர்பாக பயனாளர்கள் ‘க்ரோக்’ ஏ.ஐ.யிடம் கேட்டபோது, இனி ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் பயனர்களுக்கு காட்டப்படாது என்றும், இந்திய அரசின் விதிகளை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *