வரப்புக்களை உயர்த்தி மழை நீரை தேக்கி இயற்கை விவசாயம் -அறுவடை விழா
1 min read
Natural farming by raising the ridges and storing rainwater – Harvest Festival
6.3.2026
தமிழ்நாடு மாணவர் இளைஞர் பண்ணையம் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள போகலூரில் கருவேல மரங்கள் அடர்ந்த பூமியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் வேளாண்மை மாநில ஒருங்கிணைப்பாளர் த. ஞானபிரகாசம் தலைமையில் ஜோ.லாசர், மா.தனசேகர்,அ. சந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டு பண்ணையம் மூலம் விவசாயத்தை தொங்கினர்.
இந்தாண்டு 40 ஏக்கரில் வரப்புக்களை 5 அடி உயர்த்தி 60 ம் குருவை,பூங்கார், ஆத்தூர் கிச்சடி, துாய மல்லி. கருப்பு கவுனி, வெள்ளை பொன்னி, தங்க சம்பா, சீரக சம்பா உள்பட 9 வகையான பயிர்களை விதைத்தனர்.
இயற்கையான முறையில் 120 முதல் 160 நாட்கள் வரை இயற்கையான முறையில் பெய்த மழை நீரை சேமித்து, எந்த வகையான உரங்களும் இல்லாமல் களைச்செடிகள் வளராமல் நீரின் அளவை ஒரே அளவாக வைத்து வளர்த்து வந்தனர்.வரும் காலங்களில் அனைத்து தரப்பினரும் விதைப்பு, அறுவடை என்ற வகையில் பாதுகாப்பான உணவை தாங்களாகவே உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் விதைப்பு மற்றும் அறுவடைக்கு இடையில் களை எடுத்தலோ, உரம் கொடுப்பதோ,நீர் பாய்ச்சலோ போன்ற எதுவுமே இல்லாமல் வளர்த்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக இப்பணியில், புதுச்சேரி அரசின் பண்டிட் ஜவர்கர்லால் நேரு, வேளாண் கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார், ஒற்றை நெல் புரட்சியாளர் ஆலங்குடி பெருமாள், கோயில்பட்டி வட்டம் வேளாண் துறை உதவி இயக்குனர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கூட்டுப் பண்ணையில் விளைந்த பாரம்பர அரிசியில் மதிய உணவு வழங்கப் பட்டது.
*குணாளன், பரமக்குடி