June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடியில் முகமூடி அணிந்து சுற்றித் திரியும் கொள்ளையர்கள்

1 min read

Masked robbers roaming around Paramakudi

6.3.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் பகுதியில் கடந்த 25 ம்தேதி அதிகாலை 2 மணியளவில் தலைகவசம் மற்றும் முகமூடி அணிந்த 3 பேர் சுற்றி வந்துள்ளனர்.வீடுகளின் உள்ளே டார்ச் லைட் அடித்து பார்ப்பதுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதற்காக முயற்சித்துள்ளனர்.மேலும் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து ஒவ்வொரு நபராக வீட்டினுள் உள்ளே நுழைவது அங்குள்ள சிசி.டி.வி யில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் குறித்து பரமக்குடி காவல் துறையினர் கூறுகையில், தேனி மாவட்டம் போடியை சேர்ந்த கொள்ளையர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை,திருப்புல்லாணி ஆகிய ஊர்களில் சுற்றி திரிகின்றனர்.
பரமக்குடியில் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடிச் சென்றுள்ளதுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ரொக்கம் சில ஆயிரத்தை களவாடிச் சென்றுள்ளனர். தற்போது பதிவாகி உள்ள சிசி.டி.வி உதவியுடன் முகமூடி கொள்ளையர்களை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

-குணாளன், பரமக்குடி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *