June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பரமக்குடி அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

1 min read

Graduation ceremony at Paramakudi Government Arts College

6.3.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய தர மதிப்பீட்டில் பி தகுதி பெற்ற முதல் நிலை கல்லூரியான அரசு கலைக் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் அ.ராஜா தலைமை தாங்கினார்.
சென்னை சார் பிட்டி தியாகராய செட்டி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர் ம.சக்திவேல் கலந்து கொண்டு, பல்கலைக்கழக அளவில் தர மதிப்பெண்களை பெற்ற மின்னணுவியல் துறை,தொழில் நிர்வாகவியல், வணிகவியல் கூட்டுறவு செயலாண்மை துறை,
வேதியியல் துறை,உயிர் வேதியியல் துறை ஆகியவற்றை சேர்ந்த 20 மாணவ , மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 2024 – 25 ஆம் ஆண்டில் பல்கலைக் கழகத்தால் பட்டம் பெறுவதற்கு தகுதியான இளநிலை பாடத்தில் 421 மாணவ,மாணவிகள், முதுகலை பாடத்தில் 151 மாணவ மாணவிகள் என சுமார் 572 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்பு அவர் பேசுகையில், மாணவர்கள் சாதனையாளர்கள். விடா முயற்சி அர்ப்பணிப்பு உங்களை உயர்த்தியுள்ளது. மாணவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.தோல்வியை சந்தித்தால் தான் வெற்றியை பெற முடியும். உழைப்பு விடாமுயற்சி என்பது வெற்றியைத் தரும் என்றார். நிகழ்ச்சியில், மூத்த பேராசிரியர் மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார்,துறை தலைவர்கள் அறிவழகன், ரேணுகாதேவி, கண்ணன், மும்தாஜ் பேகம், விஜயகுமார், மோகன கிருஷ்ணவேணி உள்பட கவுரவ விரிவுரையாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

-குணாளன், பரமக்குடி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *