June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-வது இடம்

1 min read

India ranks 2nd in arms imports globally

10/3/2026
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, இந்தியா உலகின் 2-வது பெரிய ஆயுத இறக்குமதி நாடாக உள்ளது. இந்த பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆயுத இறக்குமதியில் உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2 சதவீதம். இருப்பினும், 2015-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து ஆயுத கொள்முதல் 4 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதம். முந்தைய காலகட்டத்தில் இது 51 சதவீதமாக இருந்தது. 2011-15 காலகட்டத்தில் இது 70 சதவீதமாக இருந்தது. ரஷியாவிடமிருந்து கொள்முதலைக் குறைத்துள்ள இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பி உள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிக்கு சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது. 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 80 சதவீதமாக இருந்தது. 2016-20 உடன் ஒப்பிடும்போது, 2021-25-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 66 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா (35 சதவீதம்), ரஷியா (17 சதவீதம்) மற்றும் சீனா (14 சதவீதம்) உலகிற்கு ஆயுத சப்ளையர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன.

=
எனக்குத் தெரிந்த தகவல்களை வெளியிட்டால், மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதிருக்கும்
சுப்ரமணியன் சுவாமி சொல்கிறார்
புதுடெல்லி,மார்ச்.11-
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முறை கூறியுள்ளார். வரி விதிப்பின் மூலம் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசும், பிரதமர் மோடியும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால், அது மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சுப்ரமணிய சுவாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் 3-வது முறையாக பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.
எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போதுவரை நான் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்தால் அது மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும்,” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *