வங்கதேசத்துக்கு 5,000 டன் டீசல் வழங்கிய இந்தியா
1 min read
India provides 5,000 tonnes of diesel to Bangladesh
11.3.2026
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
போர்ச்சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில், தாய்லாந்தில் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு நேற்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட்டது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்பட்டது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் காரணமாக உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நட்பின் அடிப்படையில் வங்கதேசத்துக்கு 5,000 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்பட்டது என இந்தியா அறிவித்துள்ளது.