இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்வு
1 min read
Israeli attack: Death toll in Lebanon rises to 570
11.3.2026
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. மேலும் மத்திய பெய்ரூட்டில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானவர்கள் எண்ணிக்கை 570-ஆக உயர்ந்து உள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்ரூட்டில் உள்ள ஒரு ஓட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் பலியான 4 பேரும் ஈரான் தூதரக அதிகாரிகள் என்று ஈரான் தெரிவித்து உள்ளது.
லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள பல இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர்.