கடையத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
1 min read
DMK alliance parties protest in Kadaiyam
16.3.2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லையென மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடையம் சின்னத்தேர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கடையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ. ஜெயக்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் முருகன், தேமுதிக வேதகண்னு, தங்கசாமி, மமக கோதர் மைதின், ஐயுஎம்எல் அப்துல் காதர், சிபிஐ சிவசுப்பிரமணியன், விசிக சப்பானி, எஸ்டிபிஐ அஜிஸ், தமிழ் புலி குட்டி புலி, கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதாம் உசேன் வரவேற்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை போன்ற மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திமுக மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வம், மாவட்ட பிரதிநிதி அய்யன்சாமி, பெருமாள், மாவட்ட ஓட்டுனர் அணி மேசியா சிங், ஜஹாங்கிர், தமிழரசி ஊராட்சிமன்ற தலைவர்கள் மலர்மதி சங்கரபாண்டியன், கல்யாண சுந்தரம், அசன் பீவி, ஜன்னத் சதாம்,
திமுக நிர்வாகிகள் கோவிந்தபேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரை, இசக்கிபாண்டி, சங்கரபாண்டி, சுந்தரம், திரவியம், கருப்பையா, அர்ச்சுனன், மகேஸ், முருகன், சேகர், மாரியப்பன் , வேலையா, மகேந்திரன், ஜெயராஜ், ஐயன் சாமி, முகம்மது இப்ராகிம், நூருல் அமீர், நவாஸ்கான், அப்துல் அஜீஸ், மீரான் மைதின் , மகாதேவன், கிருஷ்ணன், நாகராஜன், மோகன், விசிக கஸ்தூரி, சோபியா, சுபா சௌந்தரியா மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.