தென்காசியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு -கலெக்டர் பார்வையிட்டார்
1 min read
Collector visits awareness program on 100 percent voting in Tenkasi
16.3.2026
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட ரங்கோலியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் .ஏ.கே.கமல்கிஷோர். பார்வையிட்டார்.
புதிய பேருந்து நிலையம் அருகில் வரையப்பட்ட ரங்கோலி (கோலம்) மூலம் 100% தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர தல் 2026-ஐ முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களால் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே வரிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 100% வாக்குப்பதிவுகுறித்து எனதுவாக்கு எனது உரிமை, 100% வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவரும், மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றுக்கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதா ஹனீப், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அலெக்ஸ், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மாரிஸ்வரன், அ.பிரபாகர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலரகள் டேவிட் ஜெயசிங், இராஜேந்திரன், சரவணபாண டியன் மற்றும் மகளிர் சுய உதவிக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.