June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட காது கேளாதோர் நல சங்கத்தின் மகளிர் தினம் விழா

1 min read

Tenkasi District Deaf Welfare Association Women’s Day Celebration

16.3.2026
தென்காசி மாவட்ட காது கேளாதோர் நல சங்க ஐந்தாவது ஆண்டு உலக மகளிர் தினம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நேற்று நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது லத்தீப் வரவேற்புரை ஆற்றினார்.சங்க பொருளாளர் சங்கர் தணிக்கை அறிக்கையினை வாசித்தார்.உப தலைவர் குளோரி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நத்தம் சேர்மன் கிருஷ்ணன், திருநெல்வேலி வயது வந்தோர் காது கேளாதோர் சங்க உப தலைவர் சரஸ்வதி, திமுக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், கலைஞர் தமிழ்ச் சங்கம் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் ஆபத்துக் காத்தான், தென்காசி ஊராட்சி ஒன்றிய நியமன கவுன்சிலர் நெல்லை முத்துமாரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சரவணன், சங்க ஆலோசகர் மாரியப்பன், துணை தலைவர் கலந்தர் மஸ்தான், துணைச் செயலாளர் பீர் முகைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து சங்கத்திற்கு ரூபாய் 25000 நன்கொடை வழங்கி பேசும் போது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு எண்ணற்ற பல திட்டங்களை வகுத்து செய்து வருகிறார். மீண்டும் பல்வேறு திட்டங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க 2026 ஏப்ரல் 23 ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அவரை தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறினார். இந் நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பொன் செல்வன்,ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சேக் முகமது மாவட்ட சார்பு அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, மணிகண்டன், முத்துக்குமார், பாலமுருகன், சுப்பிரமணியன், பஞ்சவர்ணம், சுப்புலட்சுமி,
ஆர். பொன்னுச்சாமி உள்ளிட்ட 38 மாவட்ட சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை முத்துமாரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *