June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கரூர் வழக்கு: சிபிஐ விசாரணைக்காக செந்தில் பாலாஜி டெல்லி சென்றார்

1 min read

Karur stampede case: Senthil Balaji leaves for Delhi for CBI investigation

16.3.2026
கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3 முறை ஆஜராகியுள்ளார். அந்த வகையில் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணைக்கு 17ம் தேதி (நாளை) நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் செந்தில் பாலாஜி நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் செந்தில் பாலாஜி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை காலை அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *