June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியரை: வாகனச் சோதனையில் ரூ.10 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

1 min read

Puliyarai: Silver items worth Rs. 10 lakh seized during vehicle search

16/3/2026
தமிழகத்தில் மே 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர் உடனடியாக அந்தக் காரை ஓட்டி வந்து டிரைவரிடம் இதற்குரிய ஆவணங்கள் கேட்டபோது அவரது கையில் இதற்குரிய ஆவணங்கள் இல்லை எனவே தேர்தல் விதிமுறைகளின் படி அந்த காரில் இருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *