தீபத்தூண் விவகாரத்தில் அரசு பிடிவாதமாக இருக்கக்கூடாது -நீதிபதிகள் கருத்து
1 min read
Government should not be stubborn on the Thiruparankundram issue – Judges’ opinion
17.3.2027
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் மீதும் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நபர்கள் சிலர் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவு உட்பட தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடைவிதித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் தேவஸ்தானமே மலையில் பூஜை செய்து இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாமே என்றும், இந்த வழக்கில் அரசு பிடிவாதமாக இருக்கக்கூடாது என்றும், சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதாக்குவது ஏன்? இந்த ஒரு விஷயத்திற்காக எத்தனை நபர்களின் காலம் வீணாகிறது? நீதிமன்ற நேரமும் வீணாகிறது எனக் குறிப்பிட்டனர்.