கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜியிடம் 6 மணி விசாரணை
1 min read
Karur stampede incident: Senthil Balaji’s 6-hour interrogation concludes
17/3/2026
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து, செந்தில் பாலாஜிக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டு இருந்தது.
அதனை ஏற்று, இன்று (மார்ச் 17) டில்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகளின் கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அதிகாரிகளின் பதில் அளித்தார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. தவெக நிர்வாகிகள் தெரிவித்த புகார் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கில் 3 முறை நேரில் டில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.