கடையம் பகுதியில் பறக்கும்படை வாகன சோதனை- ஆட்சியர் ஆய்வு
1 min read
Flying squad vehicle inspection in the Kadayam area – District Collector inspection
18.3.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோரணமலை – கடையம் சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவர்களது பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமானஏ.கே.கமல் கிஷோர் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி, கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி. பொட்டல்புதூர் ஆர்.சி.தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து தேர்தல் பணிக்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோரணமலை. கடையம் சாலையில் பறக்கும்படை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேலாய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.