June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி: கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

1 min read

Alwarkurichi: Two ganja dealers arrested under the Gangster Act

18/3/2026
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் சுரேஷ் (வயது 34). இவரும், ராமையன்பட்டியை சேர்ந்த சுடலைமணி என்பவரது மகன் ராஜேஷ் (வயது 28) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்பை போலீசார் இருவரையும் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அம்பை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், நெல்லை எஸ்பி பிரசண்ணக்குமார் மற்றும் நெல்லை கலெக்டர்
சுகுமார் ஆகியோரிடம் பரிந்து ரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதன்பேரில் கஞ்சா வியாபாரிகளான சுரேஷ், ராஜேஷ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத் தின் கீழ் போலீசார் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *