தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் நேர்காணல்
1 min read
Interview of DMK candidate for Tenkasi constituency
18.3.2026
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், அய்யாபுரம்
திமுக பிரமுகர் மு.பி.பா. அன்புச் செழியன், தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மருத்துவர் கலைக்திரவன், தென்காசி முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் குற்றாலம் பா.இராமையா (எ) துரை, தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, வி கே புதூர் ஜேசுராஜன், தென்காசி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சு.தங்கராஜ் பாண்டியன், தென்காசி மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், மேலகரம் திமுக செயலாளர் இ.சுடலை இலஞ்சி திமுக செயலாளர் முத்தையா, ஆகியோர் திமுக தலைவரம், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைமை கழக நிர்வாகிகள் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டனர்.