நாகர்கோவில்: ரயிலில் லேப்டாப் – செல்போன் திருடிய வாலிபர் கைது
1 min read
Nagercoil: Youth arrested for stealing laptop and cell phone on train
18/3/2026
நாகர் கோவிலில் இருந்து ஜல் பைகுரி சென்ற விரைவு ரயிலில் லேப்டாப், மற்றும் செல்போன் திருடிய இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் கடந்த ஜனவரி 26ம் தேதி நாகர்கோவிலில் இருந்து ஜல்பைகுரி விரைவு ரயிலில் ராஜ முந்திரிக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்தார். அவர் கையில் வைத்திருந்த பேக்கில் லேப்டாப். மற்றும் செல்போனை வைத்திருந்தார். இந்நிலையில் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற போது அவர் தூங்கிவிட்டார்.
இதையடுத்து சாத்தூர் ரயில்நிலையம் வந்ததும் திடீரென கண்விழித்தபோது அவர் கையில் வைத்திருந்த பேக்கை காணவில்லை. இதையடுத்து மர்ம நபர் திருடி சென்றது குறித்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசில் ராஜ சேகரன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.
மேலும் திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் உத்தர வின்பேரிலும் நெல்லை ரயில்வே உட்கோட்ட டிஎஸ்பி இளங்கோவன் அறிவுரையின் பேரிலும் எஸ் ஐக்கள் ஸ்டீபன், சண்முகானந்தம், அண்ணாத்துரை, ஏட்டுக்கள் செல்வகணேஷ், மாரிச்செல்வம் ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்ட தனிப்படையினர் மர்ம நபர் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் காட்டதுரை
கல்குளம் வால்வச்ச கோஸ்டம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த குமார் என்பவரது மகன் அபிஷ் (வயது 25) என்பவர் ராஜ சேகரனின் பேக்கை திருடியது தெரியவந்தது. இதைய டுத்து அவரை கைதுசெய்த ரயில்வே போலீசார் அவ ரிடம் இருந்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மீட்டனர்.