ஆலங்குளம் அருகே புதுப்பட்டி ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
1 min read
The secretary of Pudupatti Panchayat near Alankulam has been suspended.
18.3.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் பணமோசடி புகாரில் சிக்கிய ஊராட்சி செயலரை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி செயலராக பணி பரிந்தவர் ராஜேஷ் இவர் புதுப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகார் பற்றி உரிய விசாரணை நடத்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் புதுப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை அரசு கணக்கில் செலுத்தாமல் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளது உண்மை என தெரிய வந்துள்ளது.
உடனடியாக புதுப்பட்டி ஊராட்சி செயலர் ராஜேஷை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.