June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி மாணவியை கொன்றவன் பரபரப்பு வாக்குமூலம்

1 min read

Sensational confession of the killer of a Thoothukudi student

21/3/2026
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன் (வயது 37) என்பவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
தர்மமுனீஸ்வரன் மீது பல்வேறு திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட 32 வழக்குகல் உள்ளன. இவர் கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி 30 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவர் மாணவியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.கைதான தர்மமுனீஸ்வரனிடம் போலீசார் விசாரணை செய்தபோது போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் சம்பவத்தன்று காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, மாணவி அந்த வழியாக சென்றதை பார்த்தேன். இதனால் எனக்கு திடீரென மாணவி மீது சபலம் ஏற்பட்டது. நான் மாணவியை பின் தொடர்ந்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தேன். இதனால் கத்தி கூச்சலிடவே அந்த வழியாக செல்பவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாணவியின் கழுத்தில் எனது காலை வைத்து அமுக்கினேன். தொடர்ந்து அவரது துப்பட்டாவால் மாணவி கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
தொடர்ந்து அதன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சென்று மறைந்து கொண்டேன். மறுநாள் அதிகாலையில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துத்து தூத்துக்குடிக்கு சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளான்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *