தூத்துக்குடி: கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டில் கனிமொழி, கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
1 min read
Thoothukudi student murder: Kanimozhi , Minister Geetha Jeevan offer personal condolences
22.3.2026
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினரை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் நேரில் சந்தித்து மாணவியின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவாகக் கேட்டறிந்த அவர்கள், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இந்த சந்திப்பின் போது ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், எப்போதும்வென்றான் சோலைசாமி, திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.