June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர்: மது விலக்கு போலீஸ் எனக் கூறி ரூ.50 ஆயிரம் வழிப்பறி செய்தவர் கைது

1 min read

Kadayanallur: Man arrested for extorting Rs. 50,000 by claiming to be a liquor ban police officer

24.3.2026

தென்காசி மாவட்டம்,
கடையநல்லூர் அருகே மதுவிலக்கு போலீஸ் என்று கூறி, பீடி வியாபாரியிடம் ரூபாய்.50 ஆயிரம். வழிப்பறி செய்த நபரை மோலீசார் கைது செய்தனர்.

கடையதல்லூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த பீடி வியாபாரி ராஜு. இவர் சனிக்கிழமை தோறும் பீடி தொழிலாளர்களுக்கு வார ஊதியம் வழங்குவதற்காக கடையநல் லூர் அருகே இடைகால் பகுதியில் டாஸ்மாக கடைக்கு சென்று 500 ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லறை மாற்றுவது வழக்கம்
அவ்வாறு நேற்று முன்தினம் மாலையில் பீடி வியாபாரி ராஜூ இடைகால் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று 50 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை மாற்றியுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த மேலக்கடையதல்லூர் கிருஷ்
ணன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ரமேஷ்குமார் (வயது 45) இதனை நோட்டமிட்டார். பின்னர் ராஜூ மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் அவரை ரமேஷ்குமார் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றார்.

சிறிது தூரம் சென்றதும் சமேஷ்குமார் தன்னை
மதுவிலக்கு போலீஸ் என்று கூறி ராஜூவை வழிமறித்து சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார். அப்போது ராஜூவிடம் ரூ. 50 ஆயிரத்தை பறிதது கொண்டு ரமேஷ்குமார் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து ராஜு இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்
ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்குதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் ரமேஷ்குமார் பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ரமேஷ்குமார் மீது ஏரான மான வழக்குகள் பலவேறு காவல் நிலையங்களில் உள்ளதாகவும் அவர் சரித்திர புதிவேடு குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *