June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடோ, விலை உயர்வோ இல்லை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

1 min read

There is no shortage or price hike of petrol and diesel: Union Petroleum Ministry

25.3.2026
டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

நாம் ஆண்டுக்கு 26 கோடி டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் பெற்றிருக்கிறோம் என நாட்டு மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த 2 நாட்களாக, பல இடங்களில் சில்லரை விற்பனை கடைகளிலும், பெட்ரோல் பம்புகளிலும் மக்கள் அச்சத்துடன் பெட்ரோல், டீசலை நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். நம்மிடம் போதிய அளவுக்கு பெட்ரோல், டீசல் உள்ளது. பெட்ரோல் பம்ப் எதிலும் பற்றாக்குறை இல்லை. பெட்ரோல் பம்புகளுக்கு வினியோகம் செய்யும் முனையங்களிலும் போதிய இருப்பு உள்ளது.

அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம். பயந்து போய் எரிபொருள் வாங்க வேண்டாம். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பும் இல்லை என்றும் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *