மத வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது-தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்
1 min read
Election campaigning should not be conducted at religious places of worship
28/3/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர். தமிழ்நாடு 2028 சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் 3 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கும்போது வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். ஒவ்வொரு நாளும் பெறப்படும் மனுக்கள் இணையதளம் மூலம் ECTக்கு அனுப்பப்படும்..
வேட்புமனு தாக்களில் இறுதி நாளான 06.04.2026 அன்று சரியாக பிற்பகல் 3.00 மணிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருந்தால் அவர்களில் வரிசையில் உள்ள கடைசியில் நபர்களிடமிருந்து டோக்கன்கள் வழங்கப்படும்.
அவ்வாறு டோக்கன் பெற்ற நபர்கள் தங்கள் கைவசம் உள்ள ஆவணங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். குறித்த காலத்திற்கு பின் கொண்டு வரப்படும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் செலவிற்கென புதிதாக தனி வங்கி கணக்கு தொடங்கி அனைத்து பண பரிவர்த்தனைகளையும் மேற்படி வங்கி கணக்கின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும்.
பிரசாரத்தின் போது எந்த வேட்பாளரின் தனிப்பட்ட குணநலன் மற்றும் நடத்தை குறித்து அல்லது வேட்புமனு தாக்கல் செய்தல் அல்லது வாபஸ் பெறுதல் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட வேண்டாம்.
மத வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது
ஒரு வேட்பாளர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் இடத்தின் வழியாக மாற்று கட்சியினர் ஊர்வலங்கள் நடத்தப்படக்கூடாது. மேலும் ஆயுதங்கள், தவறாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.
தென்காசி மாவட்டத்தில் நாளது வரை முறையான ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 72,51,596/- மற்றும் ரூ. 8,35,250/-மதிப்பிலான வெள்ளி 6.425 கிலோ கிராம் ஆகியவை 26.03.2028 வரை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தொகையில் ஆவணங்கள் சரிபார்ப்பிற்கு பிறகு ரூ. 66,89,766/-உரிய நபர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சேதுராமலிங்கம். மாவட்ட ஆட்சியரின் நேர்முக தவியாளர் (தேர்தல்) சுதா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) தசண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.