டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்தில் தனித்துப்போட்டி
1 min read
Dr. Krishnasamy contests alone in Ottapidaram
29.3.2026
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது. சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி விலகியது.
மேலும், 60 முதல் 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து களமிறங்கியுள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இதில், ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
நெல்லையில் ஷியாம் கிருஷ்ணசாமி, தென்காசியில் சோ.திருமலைகுமார், அம்பையில் முத்து, விருதுநகரில் பாலசுப்பிரமணியன், நாங்குநேரயில் தமிழ்செல்வி, கடையநல்லூரில் கவிதா, சங்கரன்கோவிலில் பிரபாகரன்