June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

அபிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

1 min read

Election awareness pledge in Abiramat

29.3.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி அபிராமம் பேருந்து நிலையத்தில் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பரமக்குடி தொகுதி தேர்தல் அலுவலரும்,வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவண பெருமாள், கமுதி வட்டாட்சியர் ஸ்ரீராம் ஆகியோர் தலைமை தாங்கினர்.தேர்தல் துணை வட்டாட்சியர் லலிதா, தலைமையிட துணை வட்டாட்சியர் கீதா, வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்துவது கடமை மட்டுமல்ல,அது ஜனநாயகத்தின் பெருமை என்பதை வலியுறுத்தி
விஜய பாண்டியன் சிலம்பாட்ட குழுவினர் சிலம்பம்,வாள் வீச்சு, புலியாட்டம், கட்டைக்கால், சுருவில் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களை உற்சாகப் படுத்தினர்.பின்பு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் தலைமையில் கமுதி வட்டத்தை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முன்னதாக அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.தொடர்ந்து 100 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிப் பது நமது ஜனநாயகக் கடமை, மறக்காமல் வாக்களிப்போம். ஒரு வாக்கு ஒரு மாற்றம் உள்பட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.

பின்னர், பேருந்து நிலைய வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நாடகம்,தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

-குணாளன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *