June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டி

1 min read

Vijay contests in Perambur and Trichy East constituencies

29.3.2026
தமிழக அரசியலில் களம் இறங்கி முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி. இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. இதனால் 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் த.வெ.க. தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளி அன்று த.வெ.க வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் 234 தொகுதிகள் வேட்பாளர்கள், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

தியாகராயநகரில் புஸ்சி ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, ஆயிரம் விளக்கில் ஜே.சி.டி.பிரபாகர், மயிலாப்பூரில் வெங்கட்ராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக வேட்பாளர்கள் அறிமுக கூட்ட மேடையில் த.வெ.க. கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை ஒரேநாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜயும் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *