June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப் படும் – பரமக்குடியில் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

1 min read

All stalled projects will be implemented – Edappadi Palaniswami assures

2.4.2026
சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் திருவாடானை – கீர்த்திகா முனியசாமி,பரமக்குடி – டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் – மலேசியா எஸ்.பாண்டி மற்றும் ராநாதபுரம் – பா.ஜ.க.வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூயதாவது :-

உதயநிதி ஸ்டாலின் என்னை பற்றி விமர்சனம் செய்துள்ளார். நான் 51 ஆண்டுகள் அ.தி.மு.க. வில் உள்ளேன். 48 வயதாகும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்னை பற்றி பேசலாமா? எனது அரசியல் அனுபவம் கூட உங்கள் வயது இல்லை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு, மாணவிகளுக்கு,சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம்,ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் அகற்றப்படும்.ஊழல்கள் செய்த அமைச்சர்கள்,அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கலெக்சன்,கரப்ஷன், கமிஷன் தான் நடந்துள்ளது.எந்த திட்டமும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.400 கோடியில் அரசு மருத்துவ கல்லூரியும், ரூ.125 கோடியில் சட்டக் கல்லூரியும் கொண்டு வந்தோம். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பழமை வாய்ந்த பாம்பன் ரயில்வே பாலத்திற்கு பதிலாக புதிய ரயில்வே பாலம் அமைக்க மத்திய அரசு மூலம் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தோம்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிறந்த முன்னாள் ஜனாதிபதி நினைவாக ராமநாதபுரத்தில் அவரது பெயரில் மகளிர் கல்லூரி தொடங்கினோம்.
விவசாயிகள் வளம் பெற திட்டத்தை நிதி ஒதுக்கீடு தலம் பெற காவிரி-குண்டாறு நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு வந்தேன்.ஆனால் தி.மு.க அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில் தி.மு.க. அரசு விளையாடியது.

நாட்டு மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இருந்தால் அவ்வாறு செய்து இருப்பார்களா? அதி.மு.க ஆட்சிக்கு அமைந்ததும்,
காவேரி – குண்டாறு திட்டம் மக்கள்,விவசாயிகள் ஆதரவுடன் நிறைவேற்றப் படும்.மேலும் அ.தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தி.மு.க.ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் மீண்டும் நிறைவேற்றப் படும். அ.தி.மு.க.ஒருபோதும் யாருக்கும் அடிபணியாது,யாருக்கும் அடிமைஇல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
முன்னதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி சால்வை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *