பரமக்குடி: பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ 1.56 லட்சம் மீண்டும் ஒப்படைப்பு
1 min read
Paramakudi: Seized cash worth Rs 1.56 lakhs returned
2.4.2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ம்தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற (தனி)தொகுதியில் பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரம், அரியனேந்தல் பாலம், முதுகுளத்தூர் நான்கு வழிச்சாலை ஆகிய 3 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவனங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கம் ரூ ஒரு லட்சத்தி 55 ஆயிரத்தி 970 ஐ பறிமுதல் செய்து பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்பு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளர்கள் 3 பேரும் முறையான ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட விடுவிப்பு குழு
தலைவர் திவ்யான்ஷூ நிகனிடம் சமர்பித்தனர்.பின்பு அவரது செயல்முறை உத்தரவின்படியும்,
பரமக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவண பெருமாள் செயல்முறை உத்தரவின்படியும் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக தலைமையிட துணை வட்டாட்சியர் சீதாலெட்சுமி, சார் நிலை கருவூலத்தில் இருந்து 3 பேர்களின் பணம் ரூ ஒரு லட்சத்தி 55 ஆயிரத்தி 970 ஐ பெற்று உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைத்தார்.