June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

காங்கிரசின் துரோகத்தை தோலுரித்து காட்ட மு.க.ஸ்டாலின் அறிவுரை

1 min read

MK Stalin’s advice to expose Congress’ betrayal

6.6.2026
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிட்ட கஜேந்திரன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதன்பின், தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, விவாத நிகழ்ச்சிகள், ஊடகங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் எப்படி பேச வேண்டும் என்பது தொடர்பாக அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், காங்கிரசின் துரோகத்தை தோலுரித்து காட்ட வேண்டும் எனவும் மற்ற கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்து விமர்சனம் செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. த.வெ.க. அரசின் குறைகள், மக்கள் விரோத செயல்பாடுகளை ஊடக விவாதங்களில் எடுத்துரைக்க வேண்டும். அரசின் குறைகள், மக்கள் விரோத செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களிலும் சுட்டிக்காட்டி பதிவிட அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *