குற்றாலம் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
1 min read
National Service Project Camp organized by Courtallam College
2.6.2026
ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி (தன்னாட்சி) குற்றாலம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நாட்டுநலப்பணித்திட்ட அணிகள் 20,21 சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடந்த 26.3.2026 முதல் 01.04.2026 வரை செங்கோட்டை தாலுகா வாவா நகரத்திலுள்ள சமூக நல கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது . இச்சிறப்பு முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் அமிர்தவல்லி, ஊர்த்தலைவர் அஸ்ஸாதிக் , அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வாவா முகைதீன், அகமது கபீர் ஆகியோர் பெண்கல்வியின் முக்கியத்துவம், வீரம், ஆளுமை குறித்த தகவல்களை வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தனர்.
இதில் ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள் பிராணாயாமம், யோகா, உடற்பயிற்சியுடன் ஆரம்பித்து , அங்குள்ள கோயில் ,பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தி,சுற்றுப்புற தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பை குறித்தும் மஞ்சல் பை பயன்பாடு, மரம் நடுதலின் அவசியம் குறித்தும் அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி தேர்தல் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வுப் பேரணியும் நிகழ்த்தப்பட்டது.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலரும் வீடு வீடாகச் சென்று கண் சிகிச்சை முகாம் , மருத்துவ முகாம்கள் நடத்தயிருப்பதை முன்னரே அறிவித்து பொதுமக்கள் பயன்பெறச்செய்ய பொது அறிவிப்பும் செய்யப்பட்டது. பெய்ஜிங் மருத்துவமனை நாகர் கோவில் மருத்துவர் அருள்ராஜ் குழு வழங்கிய கண் சிகிச்சை, இயற்கை மருத்துவ முகாமில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கடையநல்லூர் டாக்டர் சலீம் குழு வழங்கிய சிகிச்சை மற்றும் இலவச மருந்துகள், தென்காசி புற்றுநோய் மையத்தின் டாக்டர் அஹ்மத் பாத்திமா, டாக்டர் ஷைனி வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு , நோய் தவிர்க்கும் ஆரோக்கிய உணவுமுறைகள், வனச்சரக அதிகாரிகள் கனகராஜ், மசூத் ஆகியோர் வனம் மற்றும் வன விலங்குப் பாதுகாப்பு குறித்த தகவல்களை வழங்கினர். வடகரை பேரூராட்சி அரசு அலுவலர் மாணவர்களுக்கு வழங்கிய ஓட்டுரிமை குறித்த உறுதிமொழி, வைகை ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி திரு வைகை R குமார் நிகழ்த்திய சாலை பாதுகாப்பு விதிகள் , தென்காசி இரத்த தான முகாம் கோபி குழு வழங்கிய இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு , வழக்கறிஞர்கள் மோனிஷ்ராஜா , வளர்மதி, சேக் ஒலி முதன்மைக் காவலர், வழங்கிய சைபர் பாதுகாப்பு, கேலிவதை, போதை ஒழிப்பு குறித்த சட்ட விதிமுறை நிகழ்வுகள், கடையநல்லூர் ராஜா முஹம்மத் வழங்கிய கணினித்துறை வேலைவாய்ப்புகள், முஹம்மத் இப்ராஹீம் வழங்கிய சிலம்புப்பயிற்சி வகுப்பு, ஆசிரியர் திவான் மைதீன் வழங்கிய தன்னம்பிக்கை உரை, தோட்டக்கலைஞர் ஆய்குடி சரவணன் அளித்த மரக்கன்றுகள் முதலானவை பொது மக்களுக்கு அளித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் இறுதி நாளில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன், வக்புவாரியக்கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் M.அலியார், ஊர்த்தலைவர் அஸ்ஸாதிக் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பயனுள்ள உரையை உரைத்து மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் அல்தாஜ் பேகம் , முனைவர் ரெஜிக்கண்ணா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.