அம்பாசமுத்திரம் சித்திரை திங்கள் குறள் விழா 18-ந் தேதி நடக்கிறது
1 min read
Ambasamudram Chithirai Tingal Kural Festival will be held on the 18th
3.4.2026
அம்பாசமுத்திரம் திருக்குறள் அறக்கட்டளை சார்பாக “சித்திரை திங்கள் குறள்விழா” வருகிற 18-ந் தேதி( சித்திரை 5-ந் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த விழா மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. “கம்ப சித்திரங்கள் அரசியர் ஐவர்” என்ற தலைப்பில் அகத்தியர்பட்டி லட்சுமணன் பேசுகிறார்.
மாலை 5.30 மணிக்கு நாகர்கோவில் இளங்கோ தலைமையில் சிந்தனை அரங்கம் நடக்கிறது. வெ.கண்ணன் முன்னிலை வகிக்கிறார். பொருநை இலக்கிய வட்டம் தலைவர் தளவாய்நாதன் வாழ்த்தி பேசுகிறார்.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்ற திருக்குறளை மையமாக கொண்டு பீஷ்மர் என்ற தலைப்பில் பேராசிரியர் இரமேஷ், விதுரன் என்ற தலைப்பில் பேராசிரியர் சிவஹரி பிரம்மசங்கர், காந்தாரி என்ற தலைப்பில் பேராசிரியர் சிவபார்வதி, குந்தி என்ற தலைப்பில் வேல்ஸ் சக்திவேல் முருகன், சகுனி என்ற தலைப்பில் பேராசிரியர் கவிதா, கண்ணன் என்ற தலைப்பில் சுப்புலட்சுமி ஆகியோர் பேசுகிறார்கள். இரவு 7.30 மணிக்கு விருந்து பரிமாறப்படும்.
விழா ஏற்பாடுகளை புன்னைவன நாறும்பூநாதன் செய்து வருகிறார்.