தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Election awareness program for the differently-abled in Tenkasi
2.6.2026
தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (02.04.2026) நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவரும், ஏ.கே.கமல்கிஷோர். துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 認 முன்னிட்டு பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனத்தின் மூலம் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும், வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர். இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதா ஹனீப். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழ்நன். உதவித்திட்ட அலுவலர் டேவிட்ஜெயசிங், அமர்சேவா சங்க செயலாளர் எஸ்.சங்கரராமன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.