ஆடியோ விவகாரம் குறித்து ஆ.ராசா விளக்கம்
1 min read
A. Raza’s explanation regarding the audio issue
5.4.2026
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. 2ஜி வழக்கு தொடா்பாகவும், தி.மு.க. தொடர்பாகவும் வார்த்தைகள் இடம் பெற்று இருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அந்த ஆடியோ பேச்சு பற்றி விமர்சித்து பேசியிருந்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி வீ்ட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்த நிைலயில் அந்த ஆடியோ பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்றும், “ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!” என்றும் குறிப்பிட்டு ஆ.ராசா பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக பதவி பெற்ற – அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் அருகதையற்ற எடப்பாடி பழனிசாமி, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும், முதல்வர் கழகத் தலைவர் பற்றியும் தேர்தல் நேர அரசியல் ஆதாயத்திற்காக அவதூறாகப் பேசுவது அரசியல் அநாகரிகமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.
மகாகவி பாரதியின்’ பாஞ்சாலி சபத’ வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, “ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.