கடையம் தனித் தாலுகா ஆக்கப்படும்- மனோஜ் பாண்டியன் உறுதி
1 min read
Kadayam will be made a separate taluka – Manoj Pandian confirms
7.4.2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் பிஹெச்பி மனோஜ் பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா. ஆவுடையப்பன், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமசுப்பு, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ் ஆதித்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ததற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மனோஜ் பாண்டியன் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடனும் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்று கூறினார்.
மேலும், கடையம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனித் தாலுகா மற்றும் தீயணைப்பு நிலையம் நிறைவேறுமா என்ற நமது செய்தியாளரின் கேள்விக்கு நிச்சயமாக நிறைவேற்றப்படும் அதற்காக முழுமூச்சாக குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
முன்னதாக திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்திலிரு ந்து வேட்புமனு தாக்கல் செய்ய திரளானோர் ஊர்வலமாக சென்றனர்.