ஆலங்குளம் தொகுதியில் ராக்கெட் ராஜா, ஹரி நாடார், டாக்டர் இம்மானுவேல் வேட்புமனுக்கள் தள்ளுபடி
1 min read
Rocket Raja, Hari Nadar, Dr. Emmanuel’s nominations rejected in Alankulam constituency
7/4/2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஹரி நாடார், ராக்கெட் ராஜா, மற்றும் டாக்டர் இம்மானுவேல் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் இணைந்து தேர்தலை சந்தித்தனர். அப்போது பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் களம் இறங்கி இருந்தார். அப்போது ஹரி நாடார் 37,779 வாக்குகள் பெற்றார். ஆனால் அதற்கடுத்த சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. இதையடுத்து ஹரி நாடார் கடந்த 2024 ஆம் ஆண்டு சத்திரிய சான்றோர் படை என்ற கட்சியை ஆரம்பித்தார்.
தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹரி நாடார். இருந்த போதிலும் அவர் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவில் 11.6 கிலோ தங்கம், 6 கார்கள் ரூ.12 லட்சம் சொத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவர் தெரிவித்து நிராகரித்துள்ளார்.
சத்ரிய சான்றோர் படை சார்பில் போட்டியிட சிறையிலிருந்து ஹரிநாடார் முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது எனவும்,
பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராக்கெட் ராஜாவின் வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் ஒருவர் வாக்காளர் பட்டியல் விபரங்களை தவறாக அளித்துள்ளதாகவும்,
திமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த டாக்டர் இம்மானுவேலின் வேட்புமனுவை ஆறு பேர் மட்டுமே முன்மொழிந்து ள்ளதின் அடிப்படையிலும் இவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஹரி நாடார் வாக்குகள் பெற்றார்
இதனால் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சத்ரிய சான்றோர் படை சார்பில் ஹரி நாடார், பனங்காட்டு படை கட்சியின் சார்பில் ராக்கெட் ராஜா ஆகியோர் போட்டியிடுவதால் இந்தத் தேர்தலின் முடிவு யாருக்கு பாதகமாக அமையும் என்று அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் அச்சம் அடைந்த நிலையில் ஹரி நாடார் ராக்கெட் ராஜா ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.