June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

லக்னோ பயிற்சி மையத்தில் தீ- மாணவர்கள் 14 பேர் பலி

1 min read

Fire at Lucknow coaching centre – 14 students dead

22.6.2026
லக்னோவில் உள்ள பயிற்சி மையத்தில் தீப்பிடித்தது. தீயில் சிக்கியவர்களில் 14 மாணவர்கள் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா என்ற இடத்தில் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வணிக வளாகம் ஒன்றில் மேல் கட்டடத்தில் தான் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

சம்பவ தினமான இன்று (ஜூன் 22) அந்த வளாகத்தில் தீப்பிடித்தது. முதலில் மெதுவாக பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

தீப்பிடித்ததை அறிந்த பயிற்சி மைய மாணவர்கள் அலறினர். என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் தவித்த அவர்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்தனர்.

தகவலறிந்த உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தெரிவித்துவிட்டு கட்டடத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கியவர்களில் மொத்தம் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி முழு வீச்சில் நடக்கிறது. கட்டடத்தை கரும்புகை சூழ்ந்துள்ளதால், பணிகள் தாமதம் ஆகி வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எதனால் தீ பிடித்தது என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *