June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

குதிரை பேரம் என ஆதாரம் இல்லாமல் பேசுவதா; உதயநிதி மீது சபாநாயகர் காட்டம்

1 min read


Speaker lashes out at Udhayanidhi for making baseless allegations of horse-trading.

22.6.2026
ஆதாரம் இல்லாமல் குதிரை பேரம், கழுதை பேரம் என பேசும் இடமல்ல சட்டசபை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் காட்டமாக பதில் அளித்தார்.
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார். அவர் பேசுகையில், “ அரசின் முன்பு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. இதை எல்லாம் தீர்க்க முயற்சி செய்யாமல் அடுத்த கட்சி ஆட்களை இழுக்கும் வேலையைத் தான் நீங்கள் முழு வீச்சில் செய்து கொண்டு உள்ளீர்கள்.
இந்த அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது புதுமையான ஆட்சி என்று சொன்னீர்கள், புஷ்பா பட ஆட்சியை தான் கொடுத்து இருக்கிறீர்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்கு குதிரை பேரம் நடந்து கொண்டு இருக்கிறது என்று பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு அளித்த பதில் வருமாறு;

இந்த குதிரை பேரம், கழுதை பேரம் என்று பேசுவதற்கான இடம் அல்ல இது. ஆதாரம் இல்லாமல் நான் எந்த பேரத்தை பற்றியும் பேசுவதை அனுமதிக்க முடியாது. நீங்கள் அடுத்த விஷயத்திற்கு போகலாம்
இவ்வாறு கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *