August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

வயதில் மூத்த வேட்பாளர் பட்டியலில் பினராயி விஜயனுக்கு முதல் இடம்

1 min read

Pinarayi Vijayan tops the list of oldest candidates

8.4.2026
கேரளம் மாநில சட்டசபை பொது தேர்தல் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களில் 10 பேர் 76 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இதில் முதல் இடத்தில் பினராயி விஜயன் உள்ளார். அவருக்கு வயது 82.

இவர் கண்ணூர் மாவட்டம் தர்மமடம் தொகுதியில் இடது முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுயிடுகிறார். அவருக்கு அடுத்தபடியாக அமைச்சர் ராமச்சந்திரன் கடனம்பள்ளி உள்ளார். இவருக்கு வயது 81. இவர் கண்ணூர் தொகுதியில் இடது முன்னணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அடுத்த இடத்தில் அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் (80) உள்ளார்.

தர்மமடம் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் பினராயி விஜயன் 60 ஆண்டு கால அரசியல் பாரம்பரியம் கொண்டவர். வயது வெறும் எண் மட்டுமே என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் தனது தனிப்பட்ட செயல்பாடு மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

நடப்பு தேர்தலில் தனது சொந்த தொகுதி மட்டுமல்லாது. மாநிலம் முழுவதும் இடது முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *