June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊடுருவலை தடுக்க பாம்பு, முதலைகளை பயன்படுத்த திட்டம்

1 min read

Border Security Force plans to use snakes, crocodiles to prevent infiltration

8.4.2026
வங்கதேசத்தில் இருந்து எல்லை வழியாக பலர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வோரைத் தடுக்க எல்லையில் பாம்புகளையும் முதலைகளையும் பயன்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

இந்திய-வங்கதேச இல்லை 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த இல்லை பரந்து விரிந்துள்ளது.

இதில் கிட்டத்தட்ட 175 கிலோமீட்டருக்கு ஆறுகளும் சதுப்பு நிலங்களுமே உள்ளன. மற்ற பகுதிகளில் வேலி அமைந்து கண்காணித்தாலும் இந்த பகுதிகளில் கண்காணிப்பு சாத்தியமற்றதாக உள்ளது.

இந்த சூழலில் அவற்றில் பாம்புகளையும் முதலைகளையும் விடுவதன் மூலம் சட்டவிரோதக் குடியேறிகள் அதன் வழியே இந்தியாவுக்குள் நுழையமாட்டார்கள் என பிஎஸ்எப் நம்புகிறது.

பிஎஸ்எப் ஆலோசனை கூட்டத்தில் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டு தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *