June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கும்பமேளா அழகி மோனாலிசா கணவர்மீது போக்சோ வழக்கு

1 min read

Kumbh Mela beauty Monalisa’s husband files POCSO case!

10/4/2026
‘கும்பமேளா அழகி’ மோனாலிசா தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அவரது கணவர் ஒரு முஸ்லீம் என்பதால், இது லவ் ஜிகாத் என பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு இது லவ் ஜிகாத் இல்லை, எனது விருப்பப்படியே திருமணம் நடைபெற்றது என மோனாலிசா விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் அவரது கணவர் ஃபர்மான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் காவல் நிலையத்தில் ஃபர்மான் கான் மீது போக்சோ சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய விசாரணையில், திருமணத்தின் போது மோனாலிசாவிற்கு 16 வயதுதான் என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோனாலிசா டிசம்பர் 30, 2009 அன்று பிறந்தவர் என்பதை மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் அரசு மருத்துவமனை பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மோனாலிசா கடந்த மார்ச் 11, 2026 அன்று ஃபர்மான் கானை கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *