பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு: பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம்
1 min read
Shooting at palm oil worker: Protest at Pavurchatra
12.4.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் பனை தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து பாவூர்சத்திரத்தில் காமராஜர் இளைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும், காவல்துறை உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாவூர்சத்திரத்தில் பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க செயலாளர் சேர்மராஜா தலைமை வகித்தார்.
இதில் சங்க நிர்வாகிகள் கனகராஜ், முத்துச்செல்வம் பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் அச்சுதன் நாடார், .ரமேஷ். ஜோசப் ஆரோக்கியராஜ், காமராஜர் ஆதித்தனார் கழகம் கப்பல் ராஜா, ஆறுமுகனேரி, மெரிட் இம்மானுவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.