August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங். கோஷ்டி மோதல்

1 min read

Women’s Congress, faction clash at Sathyamurthy Bhavan

12.4.2026
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஹசீனா சையது ராஜினாமா செய்தார்.
புதிய பொறுப்புத் தலைவராக ராமலட்சுமி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளிர் காங்., செயற்குழுக்கூட்டத்தில் கோஷ்டி மோதல் வெடித்தது.

சென்னை சத்தியமூர்த்திபவனில், தமிழக மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா தலைமையில் நடந்தது.

அதில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் சவுமியா ரெட்டி, கமலக் ஷி ராஜன்னா மற்றும் மகளிர் அணி மாவட்டத்தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அல்கா லம்பா ஒப்புதலுடன், கமலக் ஷி ராஜண்ணா, ‘தமிழக காங்கிரஸ் பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்படுகிறார். இவர் சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார்.

அப்போது, மகளிர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஒருவரை மாநில தலைவியாக அறிவித்ததை ஏற்க முடியாது என ரகளை செய்தனர். வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டனர்.

மகளிர் காங்கிரசார் நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசினர். இரு தரப்பினரையும் சமரசம் செய்யப்பட்டனர். அதில், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இதற்கிடையில் ராமலட்சுமி தான் மாநில தலைவராக செயல்படுவார். அதற்குப்பின் முறையாக மாநில தலைவி அறிவிக்கப்படுவார். இந்த அறிவிப்பை எல்லாரும் ஏற்க வேண்டும்.

இல்லாவிட்டால் மாவட்ட தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அல்கா லம்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகள் அமைதியாகி, அங்கிருந்து வெளியேறினர்.

இது குறித்து மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:-
மகளிர் காங்கிரசுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். காங்கிரஸ் கட்சிக்கு 28 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில், 2 பேருக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. மாணவர்
காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் அமைப்பிலிருந்து பணியாற்றி, அகில இந்திய செயலர், மாநில தலைவர் பொறுப்பு வகித்த ஹசீனா சீட்டு கேட்டதற்கு சில கோஷ்டி தலைவர்கள் சதி செய்துள்ளனர். சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் அவர் கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ஆனால், அல்கா லம்பா, ஹசீனா சையது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி அவரை நீக்கியுள்ளார். அல்கா லம்பாவின் நீக்கத்திற்கு

எதிர்ப்பு தெரிவித்து தான் ஹசீனா சையது ஆதரவாளர்கள் கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *