June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

1 min read

Law and order has deteriorated under DMK rule: Edappadi Palaniswami’s speech

4.4.2026
தேனி மாவட்டம் அதிமுகவின் கேட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். ஆண்டிப்பட்ட நகரமே அதிர்கிறது. இந்த கூட்டம் வெற்றி பெறுவதற்கான அச்சாரம். விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். நானும் விவசாயம் செய்து வருகிறேன். முல்லை பெரியாறு அணை பற்றி முதல்வர் சிந்திக்கவில்ல. விவசாயிகள் குறித்து முதல்வருக்கு அக்கறை இல்லை.

விவசாயிகளை புறக்கணித்த முதல்வர் ஸ்டலின் வேண்டுமா? மக்களை ஏமாற்றி, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடிக்கும் முதல்வர் தேவையா? கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது முதல்வரின் லட்சியம்.

சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தினமும் அரங்கேறுகிறது. கமிஷன், ஊழல்தான் திமுக அரசின் சாதனை. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் வாழ முடியாத சூழல் உள்ளது. உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மின் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு முன்பு 900 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது ரூ.6 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் மீண்டும் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளின் பம்புசெட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படும். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *