June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பேர் பலி

1 min read

8 killed as tourist van overturns in Valparai

17.4.2026
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

13-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து கவிழ்ந்து விழுந்த வேன் உருண்டு 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து விழுந்தது. இதில் வேனில் பயணம் செய்த 16 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *