முதல்வர் மீது கிரிமினல் வழக்கு: தேர்தல் கமிஷனில் முறையீடு
1 min read
Criminal case against Chief Minister: Appeal to Election Commission
17/4/2027
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்பு பதவியில் இருந்துகொண்டே, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நகலை வேண்டுமென்றே எரித்துள்ளார்; அது அரசு ஆவணமாகும்.
அதை பொதுவெளியில் அழிப்பது, அரசியலமைப்பை அவமதிப்பது மற்றும் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பது போன்றது. எனவே, சட்ட மசோதாவை பொதுவெளியில் எரித்ததற்காக, ஸ்டாலின் மீது உரிய கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.