June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் திமுக வேட்பாளரை ஆதரத்து காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு

1 min read

Congress gathers votes by supporting DMK candidate in Kadaiyam

17.4.2026
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியனை ஆதரித்து
கடையத்தில் காங்கிரசார் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியனை ஆதரித்து கடையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் அழகு துரை தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் கலந்து கொண்டு பிரச்சார ஊர்வலத்தை தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு ஊர்வலத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி தலைவர் சீதாலெட்சுமி, வட்டார துணைத் தலைவர் ராமச்சந்திர பாண்டியன், கிராம கமிட்டி தலைவர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் ரமேஷ் மாயவன், மாநிலப் பேச்சாளர் தங்கம்மாள், வட்டார செயலாளர் அந்திரேயா, சூரியகலா, ஜம்பு, நம்பிராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு
தெற்கு கடையம், கீழக்கடையம், பெரிய தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியனை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *