99 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்த எச்.வி.ஹண்டேவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
1 min read
PM Modi praises HV Hande for coming to the polling booth at the age of 99
24.4.2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டன. 99 வயதான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே வாக்குச்சாவடி மையத்துக்கு நேரில் வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார்.
எனவே தபால் வாக்கை பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் அவர், ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நேரில் வந்து நேற்றுமுன்தினம் வாக்களித்தார். அவர், தனது கை விரலில் வைக்கப்பட்ட அடையாள ‘மை’யுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
எச்.வி.ஹண்டே வாக்களித்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி அவரை பாராட்டும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில்,”மிக முக்கியமான ஒரு செய்தி. இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தமிழ், ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியில் கருத்து பதிவிட்டார்.