கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு இதுவரை 6 பேர் மரணம்
1 min read
Six people have died from Shigella infection in Kerala so far.
18.6.2026
கேரளாவில் ஷிகெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று விரைவாக பரவி வருகிறது. இதில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதில், கடந்த ஜனவரியில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீராக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அர்ஜாவ் (வயது 7) என்ற சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் டயோரியா பாதிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், அந்த சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அர்ஜாவ் பலியானான். இந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனை மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
இதனால், கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. புதன் அன்று ஒருவர் பலியான நிலையில், 5 ஆக அதிகரித்து இருந்தது. அதற்கு முன்பு சிறுவன் அர்ஜாவ் பலியானபோது இந்த எண்ணிக்கை 4 ஆக இருந்தது.
இந்த ஷிகெல்லா தொற்று ஏற்பட்டால், டயோரியா, காய்ச்சல் மற்றும் வயிற்று பிடிப்பால் வலி போன்றவை ஏற்படும். கெட்டுப்போன உணவு அல்லது தண்ணீர் மற்றும் தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து இந்த வியாதி பரவும். அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.